சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

Update: 2022-06-21 14:06 GMT

திருமக்கோட்டையில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோவிலில் ஆனிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் காலபைரவருக்கு அபிஷேக, ஆராதனையும் அலங்காரமும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காலபைரவருக்கு வடமாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் ஞானபுரீஸ்வரர் சன்னதியிலும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் வலங்கைமான் பகுதியில் உள்ள தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோவில், கைலாசநாதர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில், அரித்துவாரமங்கலம் பாதாளேஸ்வரர் கோவில், நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்