கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2022-10-02 01:06 IST

அரியலூர் மாவட்டம் கல்லக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி 2-வது சனிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலியுக வரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்