யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு;
நீடாமங்கலம் யமுனாம்பாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு ராஜகணபதி, யமுனாம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.