தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.;
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி சந்தை திடலில் அமைந்துள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் வாணியம்பாடி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவ அலுவலர் தேன்மொழி தலைமை தாங்கினார்..
முகாமை திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டி.ஆர்.செந்தில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது டெங்கு காய்ச்சல் தடுப்பு முறை, கை கழுவும் முறை, தோல் நோய்கள் மற்றும் தன் சுத்தம் பேணுதல் பற்றியும் எடுத்து கூறினார்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி, நகராட்சி பொறியாளர், மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர், களப்பணி உதவியாளர், சுகாதார பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.