காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்

தியாகதுருகம் பகுதியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-09-21 17:35 GMT

கண்டாச்சிமங்கலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் ரவீன், மருத்துவர் ராஜலட்சுமி, கிராம சுகாதார செவிலியர் நளினி, சுகாதார ஆய்வாளர் தாமரைக்கண்ணன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதேபோல் தியாகதுருகம் பகுதியில் உள்ள 12 கிராமங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மருத்துவர் கோபிகா, கிராம சுகாதார செவிலியர் கலைமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர் 

Tags:    

மேலும் செய்திகள்