மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

Update: 2023-09-13 21:45 GMT

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, மருத்துவ சான்று வழங்கப்பட உள்ளது. மேலும் அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான கோரிக்கைகள் குறித்து பதிவு செய்யப்படுகிறது. எனவே இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்