தேவாலயங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி
சாம்பல் புதனை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
வாணாபுரம்
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. இதற்கு சாம்பல்புதன் என்று அழைக்கப்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பெருந்துறைப்பட்டு தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் காலை 9 மணி அளவில் பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் அருட்பணி ஜான்ஜோசப், விப்லான்ஸ்டீபன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் விருது வழங்கினான், தச்சம்பட்டு, தலையாம்பள்ளம், அள்ளிக்கொண்டாபட்டு, அந்தோணியார் புரம் உள்ளிட்ட தேவாலயங்களில் சாம்பல் புதனை முன்னிட்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.