மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது.
புகழூர் நகராட்சி காந்தி மண்டபத்தில் புகழூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். புகழூர் நகராட்சி ஆணையாளர் கனிராஜ் முன்னிலை வைத்தார். புகழூர் தாசில்தார் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கரூர் கோட்டாட்சியர் ரூபினா கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட 75 மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக மனுக்களை பெற்று கோரிக்கைகளை கேட்டறிந்தார். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் காமாட்சி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர், மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.