திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்

திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-07 18:56 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதன்படி திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, தொழில் கடன், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய கோரிக்கைகள் அடங்கிய 4 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி அறிவுறுத்தினார். மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் இந்தியன் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் திருநங்கைகளுக்கான இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சியினை அவர் தொடங்கி வைத்தார். கூட்டத்தில், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, ஆர்.டி.ஓ. முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்