சிறப்பு கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;

Update:2023-03-24 00:15 IST

சிங்கம்புணரி

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அகிலா கண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அமுதா சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் பல்வேறு குறைகள் குறித்து பேசப்பட்டது. மக்களின் குறைகள் அனைத்தும் விரைவில் நிவர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் வேண்டுகோளுக்கிணங்க இந்திய ராணுவத்தில் பணிபுரியும் முன்னாள் மற்றும் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களின் வீடுகளுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பில் தளர்வு ஏற்படுத்த தமிழக அரசுக்கு மாநில அளவில் கோரிக்கை வைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் காவிரி-பாலாறு இணைப்பு திட்டம் கூடிய விரைவில் முடித்திட கோரிக்கை வைக்கப்பட்டது. ஊராட்சியில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் மராமத்து செய்திட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தீர்மானங்களை ஊராட்சி செயலர் மகேஷ் வாசித்தார். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமுதா சண்முகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்