சிறப்பு கிராம சபை கூட்டம்
திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;
தொண்டி
திருவாடானை யூனியனில் உள்ள 47 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை வகித்தனர். இதில் தண்ணீரை சேமித்தல் மற்றும் சிக்கனமாக பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தண்ணீர் சேமிப்பு, தண்ணீர் சிக்கனம், தண்ணீர் பயன்பாட்டிற்கான வழிமுறைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கூட்டப் பார்வையாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாடானை யூனியனில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, செந்தாமரை செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.