சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

Update: 2023-03-22 18:49 GMT

பனைக்குளம்,

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா மருது தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஜி.மருது பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்திய நாராயணன், மைய நூலக அற்புத ஞான ருக்மணி, ஊர்நல அலுவலர் முனியராஜ், சுகாதார ஆய்வாளர் ராஜபார்த்த சாரதி, மகளிர் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் நளாயினி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானமாக பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது. ஊராட்சி துணைத்தலைவர் வினோத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் நாகேந்திரன் செய்திருந்தார

Tags:    

மேலும் செய்திகள்