சிறப்பு கிராம சபை கூட்டம்

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2022-11-30 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் பூசத்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் வரவு- செலவு கணக்குகளை வாசித்தார்.

கூட்டத்தில் 2023-2024 மகாத்மா தேசிய ஊரக வேலைக்கான பணி தேர்வு செய்யப்பட்டு நடைபெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் ரெஜினா கோடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்