மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.;

Update:2023-10-14 00:15 IST

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் புரட்டாசி கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, தேன், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்