சங்கராபுரத்தில்பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்
சங்கராபுரத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.;
சங்கராபுரம்,
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் அசோக் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம் என்று பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 41 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 29 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 12 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது. இதில் வட்ட பொறியாளர் அய்யனார் மற்றும் நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.