வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் - 1-ந்தேதி நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-09-29 10:18 GMT

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் வரும் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிற 1-ந்தேதி (சனிக்கிழமை) அன்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தேடிவரும்போது அல்லது வாக்குச்சாவடி மையத்தில் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடத்தில் அளிக்க வேண்டும்.

இது தவிர வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் NVSP, VHA - V-Portal என்ற Mobile App மூலமாக இணைத்துகொள்ளலாம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கவும் ஒரு வாக்காளர்களின் விவரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுவதை தவிர்க்கவும் அல்லது ஒரு வாக்காளர்களின் விவரங்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுவதை தவிர்க்கவும். ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்