பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்

பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2022-12-21 19:02 GMT

மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் சிறப்பு தனிக்குழு மூலம் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் 36 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை போலீஸ் சூப்பிரண்டு கேட்டறிந்தார். இதையடுத்து அந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிசேகரன் (சைபர் கிரைம்), காமராஜ் (மதுவிலக்கு அமலாக்க பிரிவு), துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடேசன், சுரேஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்