வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-13 16:23 GMT

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் நடைபெற்றது. காவேரிப்பாக்கம் பிர்காவில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் என 1,222 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த முகாமை அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா மற்றும் நெமிலி தாசில்தார் சுமதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் தங்கள் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், இதே போல் பொது மக்கள் கொடுக்கும் மனுக்களை பெற்று உரிய முறையில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அய்யம்பேட்டைசேரி பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ரகு, சத்யா, கிராம உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்