மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அவர்களது காப்பாளர்களுடன் கலந்துகொண்டனர்.
முகாமையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.