பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்

பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.

Update: 2022-07-08 17:41 GMT

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகலட்டை கோரியும் கைப்பேசி எண் மாற்றம் செய்தல், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்