பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம்

பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.

Update: 2023-08-19 18:43 GMT

வேலயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சி சேங்கல்மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு 1,000 லிட்டர் பால் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடந்து. தொடர்ந்து துளசி மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்