அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல் வேலாயுதம்பாளையத்தில் உள்ள மகாமாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.