பஞ்சமுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

பஞ்சமுக பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.;

Update:2023-01-14 22:47 IST

தா.பேட்டையில் காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடு நடந்தது. அப்போது சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு பஞ்சமுக பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்