தென்மேற்கு பருவமழை.. சென்னையில் பேரிடர் மீட்புத்துறை ஆலோசனை
பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
சென்னை,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதை அடுத்து, தென் கிழக்கு பகுதிகளிலும் பரவி உள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.
இதில், பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது.