பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லியை அடுத்த வடக்கு சங்கன்திரடு பார்வதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 70). அதே பகுதியை சேர்ந்த இவரது மருமகன் மாரியப்பன் (47). இவருக்கு சொந்தமான தங்க நகையை பேச்சிமுத்து அடகு வைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றவே மாரியப்பன், மாமனார் பேச்சிமுத்துவை அவதூறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி பேச்சிமுத்து சுத்தமல்லி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், மாரியப்பனை கைது செய்து விசாரித்து வருகிறார்.