தந்தை வருகைக்காக காத்திருந்த போது கார் மோதி மகன் பலி; தாய் படுகாயம்

ராமநாதபுரம் அருகே தந்தை வருகைக்காக காத்திருந்த போது கார் மோதி மகன் பலியானார். தாய் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-02-05 18:25 GMT

ராமநாதபுரம் அருகே தந்தை வருகைக்காக காத்திருந்த போது கார் மோதி மகன் பலியானார். தாய் படுகாயம் அடைந்தனர்.

கார் மோதியது

ராமநாதபுரம் அருகே உள்ள மேலவலசை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி தமிழ்செல்வி (வயது47). இவர் தனது மகன் திவாகர் (20) என்பவருடன் நேற்று முன்தினம் ராமநாதபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து வீட்டிற்கு தேவையான சாமான்கள் வாங்கினார். இதன்பின்னர் தாயும், மகனும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

வழுதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது தமிழ்செல்வியின் கணவர் ஆறுமுகம் குயவன்குடியில் இருந்து வந்து கொண்டிருப்பதாக தெரிவித்ததால் வாகனத்தை நிறுத்தி விட்டு காத்துக்கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திவாகர் தலையில் படுகாயமடைந்து பரிதாபமாக பலியானார்.

விசாரணை

தமிழ்செல்விக்கு கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தமிழ்செல்வி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்