மின் அலுவலகத்தில் இருந்த சில கிராமங்கள் அரியலூர் மாவட்டத்திற்கு மாற்றம்
மின் அலுவலகத்தில் இருந்த சில கிராமங்கள் அரியலூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.;
பெரம்பலூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட குன்னம் உபகோட்டம் மருதையான் கோவில் பிரிவு அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வந்த மணக்கால், வெள்ளூர், இலுப்பையூர், சுப்புராயபுரம் ஆகிய கிராமங்கள் அரியலூர் கோட்டம் அரியலூர் வடக்கு பிரிவு அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் துங்கபுரம் பிரிவு அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வந்த நம்மங்குணம், சொக்கநாதபுரம், பழமலைநாதபுரம், என்.குடிகாடு ஆகிய கிராமங்கள் செந்துறை கிராமியம்-2 பிரிவு அலுவலகத்திற்கும், அங்கனூர் கிராமம் ஆ.எஸ். மாத்தூர் பிரிவு அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளுக்கு அரியலூர் கோட்டத்திற்கு உட்பட்ட அரியலூர் வடக்கு, செந்துறை கிராமியம்-2, ஆ.எஸ். மாத்தூர் பிரிவு அலுவலகங்களை இன்று (சனிக்கிழமை) முதல் தொடர்பு கொள்ளலாம், என்று பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.