ஆம்பூரில் சோபா, ஏ.சி. கண்காட்சி, விற்பனை

ஆம்பூரில் சோபா, ஏ.சி. கண்காட்சி, விற்பனை நடந்தது.

Update: 2023-04-14 18:21 GMT


ஆம்பூரில் சோபா, ஏ.சி. கண்காட்சி, விற்பனை நடந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் ரோடு சீனிவாசா மஹாலில் ஆம்பூர் நகரில் முதல்முறையாக சோபா மற்றும் ஏ.சி. கண்காட்சி மற்றும் விற்பனை வருகிற 17-ந்் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஸ்ரீகுமரன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னீச்சர்ஸ் நிறுவனங்களின் தலைவர் என்.எஸ்.குமரகுரு தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.கோ.சுகவனம், ஆம்பூர் நகரமன்ற துணைத்தலைவர் எம்.ஆர். ஆறுமுகம் ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ரோட்டரிசங்க பிரமுகர்கள், வணிகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சோபா தயாரிப்பு நிறுவனத்தினர், எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சோபா மற்றும் ஏ.சி. விற்பனை கண்காட்சியில் சோபா தயாரிப்பு பேக்டரிகளில் இருந்து நேரடியாக இங்கு கொண்டுவரப்பட்டு மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் அனைத்து வகையான ஏ.சி.கள் எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இங்கு விற்பனை செய்யப்படும் சோபா மற்றும் ஏ.சி.களை தவணைமுறை திட்டத்திலும் வாங்கலாம். கண்காட்சியில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி நாளன்று ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சோபா இலவசமாக வழங்கப்படும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்