சமூக நல்லிணக்க பிரசாரம்

கோவில்பட்டியில் சமூக நல்லிணக்க பிரசாரம் நடந்தது.;

Update:2023-08-18 00:15 IST

கோவில்பட்டி:

கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பிரசாரம் நடந்தது. மக்கள் நீதி மய்யத்தின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க தலைவர் அபிராமி முருகன், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ரவிக்குமார், இந்திய கலாசார நட்புறவு கழக மாவட்ட துணைத்தலைவர் சம்பத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்