சோ.பாலகிருஷ்ணன் நினைவு நாள்

நினைவு தினத்தையொட்டி முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. சோ.பாலகிருஷ்ணன் சிலைக்கு எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-06-24 18:09 GMT

முதுகுளத்தூர்,


தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் முதுகுளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சோ.பாலகிருஷ்ணன் நினைவு தினம் முதுகுளத்தூரில் காங்கிரஸ் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. இதில் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார்.

முன்னதாக முதுகுளத்தூர் சோனை மீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைந்துள்ள சோ. பாலகிருஷ்ணன் திருவுருவச்சிலைக்கு ராமநாதபுரம் மாவட்ட எம்.பி. நவாஸ்கனி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து முதுகுளத்தூர் காங்கிரஸ் கட்சியினர் சோ.பாலகிருஷ்ணன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்