தேன்கனிக்கோட்டையில்கடும் பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

Update:2023-03-03 00:30 IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் தற்போது பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் காலை நேரத்தில் கடும் குளிருடன் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. சாலையில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள், வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் பனிமூட்டத்தால் அவதியடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்