வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு

வீட்டிற்குள் 6 அடி நீள பாம்பு புகுந்தது.;

Update:2022-11-28 23:01 IST

தொண்டி, 

திருவாடானை தாலுகா செங்கமடை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது58). இவரது வீட்டிற்குள் சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்து சமையல் செய்யும் இடத்தில் சுருண்டு கிடந்துள்ளது. இதனை பார்த்த அவரது மனைவி, மகள் இருவரும் கத்திகூச்சல் போட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளனர். அதன் அடிப்படையில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்