வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது

வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பு பிடிபட்டது

Update: 2022-12-11 19:00 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஜீயர் தோப்பு தெருவை சேர்ந்தவர் பாபு. இவருடைய வீட்டில் நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த பாபு உடனடியாக மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வீட்டில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்தனர். 6 அடி நீளம் இருந்த அந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்