பழனியில் அரசு பள்ளிக்குள் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு
வகுப்பறைக்குள் திடீரென பாம்பு புகுந்ததால் மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி கடைவீதியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது, வகுப்பறைக்குள் திடீரென பாம்பு புகுந்ததால், சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவ, மாணவிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் அளித்த தகவலின்பேரில், தீயணைப்புத்துறையினர் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் வகுப்பறையின் மேஜைகளுக்கு இடையில் சுற்றித் திரிந்த பாம்பை நீண்ட நேரம் போராடி பிடித்த அவர்கள், அதனை வனப்பகுதிக்குள் விடுவதற்கு கொண்டு சென்றனர். இந்த பாம்பு கொம்பேரி மூக்கன் வகையைச் சேர்ந்தது என்று அவர்கள் தெரிவித்தனர்.