விழுப்புரம் அருகே கோழி முட்டைகளை விழுங்கிய நல்லப்பாம்பு பிடிபட்டது

விழுப்புரம் அருகே கோழி முட்டைகளை விழுங்கிய நல்லப்பாம்பு பிடிபட்டது.

Update: 2023-09-21 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள நன்னாட்டாம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் தவிட்டம்மாள். இவர் தனது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இதில் சில கோழிகள் தினந்தோறும் முட்டையிட்டு வந்தன. ஆனால் அந்த முட்டைகள் காணவில்லை என்று அவர் அக்கம், பக்கத்தினரிடம் கேட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தவிட்டம்மாள், கோழி முட்டைகளை தேடியபோது வீட்டின் பின்புற பகுதியில் சுமார் 6 அடி நல்லப்பாம்பு ஒன்று, கோழி முட்டைகளை விழுங்கியவாறு நகர முடியாமல் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுபற்றி அவர், அக்கம், பக்கத்தினரிடம் கூறவே அவருடைய வீட்டு முன்பு பொதுமக்கள் திரண்டு வந்து அந்த பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சூர்யா (வயது 30) என்ற வாலிபர் துணிச்சலாக அந்த பாம்பை உயிருடன் பிடித்தார். பின்னர் அவர் அந்த பாம்பை, ஆள்நடமாட்டம் இல்லாத ஏரிப்பகுதியில் கொண்டு விட்டு விட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்