வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு சிக்கியது

Update:2023-04-27 00:15 IST

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் இந்திரா நகரை சேர்ந்தவர் பத்மா. நேற்று இவருடைய வீட்டுக்குள் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு, அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வீட்டுக்குள் புகுந்த பாம்பை தேடினர். பின்னர் நவீன கருவி மூலம் நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.

மேலும் செய்திகள்