அரூர்:
அரூர் கோவிந்தசாமி நகரில் வசித்து வருபவர் பத்மா மாரியப்பன். இவருடைய வீட்டுக்குள் நேற்று 6 அடி நீள நாகப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து அவர் அரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். இதையடுத்து அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.