புகையிலை பொருட்கள் கடத்தல்; 2 பேர் கைது

மணலூர்பேட்டையில் புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-27 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தபோது 800 பாக்கெட் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை பிடித்து விசாரணை செய்தபோது விசாரணையில் அவர் கரையான்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் பன்னீர்செல்வம்(வயது 27) என்பதும், மணலூர்பேட்டையில் உள்ள கடையில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கி வந்ததும் தொியவந்தது. இதையடுத்து பன்னீர்செல்வத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளுடன் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர் கொடுத்த தகவலின் பேரில் கடை உரிமையாளர் மணலூர்பேட்டை பெருமாள் கோவில் தெரு நடராஜன் மகன் கார்த்திகேயன்(43) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்