ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கஞ்சா கடத்தல்; வடமாநில வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கடத்த முயன்ற கஞ்சா சிக்கியது.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வழக்கம் போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கடத்த முயன்ற 3 கிலோ எடை கொண்ட கஞ்சா சிக்கியது.
இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற பீகாரைச்சேர்ந்த முகமது இன்சார் (வயது 20) என்பவரை கைது செய்தனர்.