குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட அடிவள்ளி, கொங்கல்நகரம், சோமவாரபட்டி, இலுப்பநகரம், வீதம்பட்டி ஆகிய பள்ளிகளில் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சத்தில் ஸ்மார்ட் போர்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு பிஸ்ெகட் வழங்கினார். வீதம்பட்டி ஊராட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் தொடங்கி வைத்தார். குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன், ஒன்றிய எம். ஜி.ஆர்.மன்ற செயலாளர் ராமநாதன், அவைத்தலைவர் மகாராஜன், துணைச்செயலாளர் செந்தில், பொருளாளர் முத்துசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரியசாமி, திருமலைசாமி, வெங்கடேசன், அ.தி.மு.க நிர்வாகிகள் செந்தில், சசிகுமார், பத்மநாபன், ராஜரத்தினம், மாரிமுத்து ராம்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனர்.