குறுங்காடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் மக்கள்
பொயலூர் ஊராட்சியில் குறுங்காடுகள் வளர்ப்பில் பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.;
காரைக்குடி
கல்லல் ஊராட்சி ஒன்றியம் பொயலூர் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் குறுங்காடுகள் வளர்த்தல், நர்சரி மற்றும் செடிகள் வளர்த்தல் ஆகியவற்றில் பொயலூர் ஊராட்சி மன்ற தலைவர் திவ்யநாதன் தலைமையில் பொதுமக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வளர்க்கப்பட்டு வரும் நர்சரி செடிகள் மற்ற ஊராட்சிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் பயிரிடப்பட்டு ஊராட்சி மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதனால் ஊராட்சி ஒன்றிய அளவில் பொயலூர் ஊராட்சி முன்மாதிரி ஊராட்சியாக திகழ்கிறது. ஊராட்சி மன்ற தலைவர் திவ்யநாதன் வழிகாட்டுதலின் பேரில் ஊராட்சி பகுதிகளில் மூங்கில், கொய்யா, சீதா பழ மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கிடையே ஆர்வமுடன் நர்சரி, பழ மரக்கன்றுகள், மூங்கில், குறுங்காடுகள் ஆகியவற்றை ஆர்வத்துடன் வளர்த்து பராமரித்து வருவதை மாவட்ட நிர்வாகம் பாராட்டியுள்ளது.