பத்ரகாளி அம்மன் கோவிலில் அதிகாலை வரை நிறைவேற்றப்பட்ட தூக்க நேர்ச்சை

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தொடங்கிய தூக்க நேர்ச்சை நேற்று அதிகாலை வரை தொடர்ந்தது.

Update: 2023-03-26 18:45 GMT

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தொடங்கிய தூக்க நேர்ச்சை நேற்று அதிகாலை வரை தொடர்ந்தது.

தூக்க திருவிழா

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி மாத மீன பரணி தூக்க திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் வழிபாடு நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு தொடங்கியது.

இந்த விழாவைெயாட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்திருந்தனர். ேநற்று முன்தினம் காலையில் ெதாடங்கிய தூக்க நேர்ச்சை இரவு வரை தொடர்ந்து விடிய விடிய நடந்தது. நேற்று அதிகாலை 3½ மணியளவில் தூக்க நேர்ச்சை நிறைவடைந்தது.

குருதி தர்பணம்

நிகழ்ச்சியில் 1,352 குழந்தைகளுக்கு நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. தூக்க நேர்ச்சை முடிந்தவுடன் குருதி தர்பணம் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கோவில் முன்பக்கம் நடப்பட்டிருந்த கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டு திருவிழா முடிவடைந்தது. அத்துடன் திருவிழா கோவிலில் இருந்து அம்மன்கள் வட்டவிளை மூலக்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

திருவிழா முடிந்த பின்னரும் நேற்று காலை முதல் திருவிழா பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்திருந்தனர். இதனால் மேற்கு கடற்கரை சாலை மஞ்சதோப்பு முதல் கண்ணநாகம் வரை கூட்டம் அலைமோதியது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்