ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி குறித்து அவதூறு: பா.ஜனதா மாநில நிர்வாகி கைது

ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி குறித்து அவதூறு பரப்பிய பா.ஜனதா மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-01 17:20 GMT

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள முத்தக்காபட்டியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ். இவர் பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில நிர்வாகியாக உள்ளார். இந்தநிலையில் பிரவீன்ராஜ் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் குறித்து அவதூறு பரப்பி உள்ளார். இதுகுறித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கரூர் சைபர் கிரைம் ேபாலீசார் நாமக்கலுக்கு சென்று பிரவீன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்