தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி
தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நடைபெற்றது.;
ராமநாதபுரம் வட்டார வளமையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் வயது வந்தோர் கல்வி மையங்களில் பணிபுரிந்து வரும் தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், மல்லிகா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயிற்சியில் வக்கீல் சுரேஷ்குமார் பெண்களுக்கான சட்டம் குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் இன்பவள்ளி பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் சரிவிகித உணவு முறை பற்றியும் கூறினர். இதில் 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுந்தரமூர்த்தி மற்றும் அனைத்து ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.