2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

கும்பகோணத்தில் ரெயில் பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-04-19 20:41 GMT

கும்பகோணம்,

கும்பகோணத்தில் ரெயில் பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பணம்- செல்போன் பறிப்பு

கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மகன் பாரதி(வயது24). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ந் தேதி வெளியூர் செல்வதற்காக கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வந்தாா். ரெயில் வருவதற்கு முன்பு ரெயில் நிலையம் அருகே ஒரு மறைவான பகுதியில் இயற்கை உபாதையை கழிக்க பாரதி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென பாரதியை வழிமறித்து அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

6 ஆண்டுகள் சிறை தண்டனை

இது குறித்து பாரதி கும்பகோணம் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம்- செல்போனை பாரதியிடம் இருந்து பறித்து சென்ற கும்பகோணம் கஸ்தூரிபாய் ரோடு பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (20) மற்றும் கார்த்தி (25) ஆகிய இருவரையும் கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினா்.இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பணம் செல்போனை பறித்து சென்ற விவேகானந்தன், கார்த்தி ஆகியோருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.21 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்