சிவராத்திரி விழா: ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சிவராத்திரி விழா: ஆயிரகணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-02-19 10:25 GMT

அவினாசி

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி உயிருடன் மீட்டெடுத்தது, காசிக்கு நிகரான கோவில் என்ற பல சிறப்புகள் பெற்றதாக அவினாசியில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி விழா நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் நேற்று இரவு மகாசிவராத்திரி விழா விமர்சையாக நடந்தது.மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாலை 4:30 மணிக்கு சனி பிரதோஷ பூஜை இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை இரவு 10:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நள்ளிரவு ஒரு மணிக்கு மூன்றாம் கால பூஜை அதிகாலை 3:30 நான்காம் கால பூஜை..மற்றும் சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர் பால, தயிர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. மகாசிவராத்திரி தினத்தன்று சனிப்பிரதோசமும் இணைந்ததால் இது சக்திவாய்ந்தது என கருதப்படுகிறது. எனவே நேற்று பிற்பகல் 2 மணி முதல் அவினாசி திருப்பூர், அன்னூர், ஊட்டி மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் திரளான பெண்கள் உள்ளிட்ட ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டனர். கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் பக்தர்கள் அமர்ந்து சிவபுராணம் மற்றும் பக்தி பாடல்கள்வாசித்தனர்.சிவராத்திரை விழாவையொட்டி நேற்று இரவு அவினாசி மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.சிவராத்திரி விழாவை முன்னிட்டு அவினாசி போலீஸ் துணை சூப்பிரண்டு பவுல்ராஜ் தலைமையில் கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்