ராமசாமி கோவிலில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம்

கும்பகோணம் ராமசாமி கோவிலில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது

Update: 2022-08-25 20:40 GMT

கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான ராமசாமி கோவிலில் ராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி ராமர் மற்றும் சீதா தேவி சிறப்பு மலர் அலங்காரத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மணமேடையில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருமண சடங்குகளை நடத்தி ராமபிரான்- சீதாதேவிக்கு மாங்கல்யம் அணிவிக்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்