அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி கொடி அறிமுக விழா
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி கொடி அறிமுக விழா நடந்தது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் நேற்று அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி கொடி அறிமுக விழா நடந்தது. விழாவில் நெல்லை தட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை தலைவர் எம்.எஸ்.காசிலிங்கம் கலந்து கொண்டு அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி கொடியை வெளியிட்டார். அதனை அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் ஜெ.முத்துரமேசு நாடார் பெற்று கொண்டார்.
பின்னர் முத்துரமேசு நாடார் கூறுகையில், ''தமிழகத்தில் ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையிலும், விவசாயிகள், வணிகர்களின் நலன் காப்பாற்றும் வகையிலும் தர்மம் செய்து, கல்வி உதவி, மருத்துவ உதவி செய்து உலகெங்கும் அய்யா வைகுண்ட சுவாமியின் கொள்கை நெறிமுறைகளை கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படுவோம்'' என்று கூறினார்.
விழாவில் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி பொதுச்செயலாளர் சுரேஷ்மாறன், பொருளாளர் சிவா, ஒருங்கிணைப்பாளர் வீரமாணிக்கம் சிவா, கொள்கை பரப்பு செயலாளர் பேச்சிராஜன், நாடார் மக்கள் ஜோதி துணை ஆசிரியர் தேன்ராஜா, தமிழ்நாடு நாடார் சங்க மாநில மகளிரணி அமைப்பாளர் சோபிதாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.