ஒற்றை யானை நடமாட்டம்

பொருந்தலாறு அணை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை உலா வருகிறது.;

Update:2023-07-10 01:30 IST

பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பாலாறு-பொருந்தலாறு அணை உள்ளது. இந்த அணைக்கு அருகே பாலாறு, பொருந்தலாறு, புளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் பொருந்தலாறு அணை மற்றும் புளியம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் தோட்ட பகுதியில் உலா வரும் யானை பகலில் வனப்பகுதிக்குள் சென்றுவிடுகிறது. எனவே இரவு நேரத்தில் தோட்டங்களுக்கு செல்வதை தவிர்த்து வருவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஜீரோபாய்ண்ட் என்ற இடத்தில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. ஆனால் அந்த ஒற்றை யானையால் இதுவரை எவ்வித சேதமும் இல்லை. அதேநேரத்தில் தோட்ட பகுதியில் யானை நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க விவசாயிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம். மேலும் இரவில் தோட்ட பகுதிக்கு தனியாக செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்