சிங்கப்பெருமாள் கோவில், பரனூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா

சிங்கப்பெருமாள் கோவில், பரனூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-06-04 13:07 GMT

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி சிங்கப்பெருமாள் கோவிலில் ரத்ததான முகாம் மற்றும் கழக முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி செயலாளரும், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச்செயலாளர் கதிரவன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ், முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் தா.மோ.அன்பரசன், செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், துணைத்தலைவர் ஆராமுதன் ஆகியோர் கலந்துக்கொண்டு 300 பேருக்கு அன்னதானம், வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கினர்.

ரத்ததானம் செய்த 250 பேருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு பொருட்கள் வழங்கினார்கள். வார்டு உறுப்பினர்கள் பாஸ்கர், சரவணன், பாரேரி ஆறுமுகம், சரத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல மகேந்திராசிட்டியில் நடந்த விழாவுக்கு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் அஞ்சூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் முகமதுகான், எல்லப்பன், ராமதாஸ் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் தா.மோ.அன்பரசன், செல்வம் எம்.பி., வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினார்கள்.

அஞ்சூர் ஊராட்சியில் 12 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகளும் வழங்கப்பட்டன. பூவானன், சேகர், கன்னியப்பன், சீனுவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நடந்த விழாவுக்கு வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டில்லி தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவானந்தம், பார்த்திபன் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் மோகனா ஜீவானந்தம் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் தா.மோ.அன்பரசன், செல்வம் எம்.பி., வரலஷ்மி மதுசூதனன் எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு 200 பேருக்கு பிரியாணி, வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.

வீராபுரத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு சீருடைகள், கிரிக்கெட் விளையாட்டு பொருட்கள், பிரியாணி வழங்கினார்கள். விழாவில் ஆப்பூர், சந்தானம், ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.ஜி.திருமலை, வார்டு உறுப்பினர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்